Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Wednesday, July 15, 2020

சிறிதிலும் பெரிதுண்டு

15 ஜூலை 2017:

வில்லின் அம்பால்வீழா மாவீரனும் அன்பிலாச் 
சொல்லின் அம்பால் நிலைகுலைவான் எனில் 
அறிக அவன்மனம் யாருக்கும் தீங்கிழைக்கா 
சிறிய குழந்தையின் பேருள்ளமென்று!


15 ஜூலை 2019:

நிலைகுலைந்த அச்சிறிய குழந்தை அச்சத்தால் தன் பேருள்ளத்தைக் குறுக்கி மற்ற எவரையும் போல நமக்கென்ன என்ற நிலையினை மனம்வெதும்பி எட்டியபடியே தன்னலம் பேணத் தொடங்கிய பின் உலகம் அதனைப் பாராட்டிப் பறைசாற்றியது "நீ நன்கு வளர்ந்துவிட்டாய்" என்று!

Tuesday, September 29, 2009

பாடம்

நெருப்புக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிந்தால் கூறுவேன்:
குழந்தைகள் மீதுபட்டால் பனியாய்க் குளிர்ந்திடென்று!
நீருக்கோர் பாடம்சொல்ல இயன்றால் உரைப்பேன்:
பிள்ளைகள் மூழ்க நேர்ந்தால் நிலமாய் மாறிடென்று!
மண்ணிற்கென்று ஒரு பாடம் உண்டு: இளஞ்சிறார்கள்
விழுந்தால் பஞ்சாய் நெகிழ்ந்திடென்று! ஏனென்று
வினவினால் வினவுவேன்: பிஞ்சுகளுக்கு மனிதர்களால்
நிகழும் அபாயங்கள் போதாதாவென்று!