Showing posts with label கோ. Show all posts
Showing posts with label கோ. Show all posts

Wednesday, January 11, 2017

கோவைக்கு ஒரு வாழ்த்து!

கோவையால் வாழ்ந்தோர் பலர் கோவையாய்க் 
கோவையைக் கைவிட்ட போதும் கோவாய்க் 
காக்கும் கோவை - பாவையரை மட்டுமின்றிப் 
பன்மொழி பேசும் அத்தனைக் கோவையரையும்!


பெண்களுக்குப் பாதுகாப்பான இந்திய நகரங்களுள் முதன்மையானதாகக் கோவை தேர்வுசெய்யப்பட்டதை முன்னிட்டு 11 ஜனவரி 2017 அன்று நான் எழுதியது இது.

செய்தி ஆதாரங்கள்:


Sunday, March 31, 2013

கடவுளே, நீ யார்?

தொழுபவர்க்கு நன்மைநல்கித் தன்னைவணங்காரைக் கைவிட்டுத்
தோன்றியபடி விதிசமைத்துத் தலையெழுத்தென உரைக்கவிட்டுத்
தெய்வமெனப் பேர்பெற்றிடக் கடவுளெனவுனக்குப் பெயரெதற்கு?
தேவையெலாம் அரசியலாற்றலென்று பொல்லாததற்கும் துணிந்து
அடிவருடுபவர்க்கு அள்ளித்தந்து எதிர்ப்போரை அழித்தொழித்து 
ஆட்சியினை ஆட்டிவைக்கும் சர்வாதிகாரக் கொடுங்கோலனே
இறைவனென இயற்றப்பட்டிருப்பதை அறிந்திருந்தால் உணர்ந்திருப்போம்:
ஈரமனமும் ஈகைக்குணமுமே கோவெனப்போற்றுதலுக்கு உகந்ததென்று!