Showing posts with label துன்பம். Show all posts
Showing posts with label துன்பம். Show all posts

Tuesday, February 13, 2018

சான்றோனின் துன்பம்

சான்றோனென அறியப்படுதலும் ஓர்துன்பமே - ஈன்றபொழுதின் 
பெரிதுவக்கத் தாயில்லாத போழ்து!

- என் குறள்.

Sunday, October 31, 2010

வேண்டுதல்

வராததை வருமென்று எண்ணியெண்ணி நிதம்நாடி
வந்ததை எல்லாம் விட்டுவிட்டுத் தேடியோடியதில்
வராத துன்பமெல்லாம் வந்தபின்னும் - அவ்வராததை
வந்திட வேண்டுதல் முறையோ?

Thursday, June 11, 2009

இன்ப துன்பம்!

இன்பமான துன்பத்தை இன்பமென எண்ணித்தேடி
இன்முகத்துடன் ஏற்றுக் கலந்துறவாடித்
துன்பமான இன்பத்தைத் துன்பமெனத் தவிர்த்தால்
துன்பமேன் நேராது கூறு!

Tuesday, March 31, 2009

துன்பமும் பெருந்துன்பமும்!

ஏதாவதொரு வழிபிறக்காதா என்று தவித்துத் தேடும்போது
எதுவும் கிடைக்காமல் போவது துன்பமெனில்
ஏராளமாய் அடைந்த ஒன்றில் நிலைத்திட நினைக்கும்போது
எண்ணியதெல்லாம் கிடைக்கப் பெறுவது பெருந்துன்பமன்றோ?!