Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Wednesday, July 31, 2013

வாழ்த்து

வாழ்த்தென்றால் என்னவென்று வினவினான் நண்பன் - 
வாழ்கவெனும் சொல்லெல்லாம் வாழ்த்தோ என்றவாறே!
வாழ்த்தத்தயங்கா நானோ புன்னகைத்தபடி மறுத்தேன் - 
வாழ்த்தில் சிக்கலென்ன என்றுஅவன் மனம்வியக்கவே!

​அவர்பால் தன்னகத்தில் தோன்றும் உண்மையன்பைச்  
செல்வமாய் அவருணர உரைப்பதே வாழ்த்தென்றேன்!
அன்பில்லா ஒருவரின் பொய்நகையுடன் வெளிப்படும் 
செல்லாத சொல்லெல்லாம் வாழ்த்தல்லவே யென்றேன்!

Sunday, May 20, 2012

உறக்கமும் விழிப்பு(ணர்வு) தரும்!

இனிய கனவிலிருந்து துயில் முடிந்து எழுந்தபின் அக்கனவு உண்மையாகாதா என்று ஏங்கும் நோய்க்கு மருந்து, நாம் வாழும் வாழ்வே ஒரு கனவு தான் என்னும் உண்மையை உணர்வது தானோ?