Showing posts with label வினை. Show all posts
Showing posts with label வினை. Show all posts

Sunday, March 30, 2014

அன்பின் நட்பும் நட்பின் அன்பும்

நட்பு எனக்கு அன்பு செய்ததால் அன்புக்கு நட்பானேன்;
அன்புடன் பழகப் பழகவே பல்கிப் பெருகியது நட்பு!
அன்பின் நண்பனென்றும் நட்பின் அன்பனென்றும்
நட்பும் அன்பும் எனைக்காத்துக் கொண்டாட,
வியந்து நின்றது வினை - என்னை 
வீழ்த்தும் வழி எதுவென்று அறியாது!

துன்பமெனும் அம்பை இறுமாப்புடன் எய்தது வினை; 
ஆறுதலால் உயிர்த்தெழச் செய்தது நட்பின் அன்பு!
துரோகம் கொண்டு நிலைகுலைக்க எண்ணியது வினை;
ஆதரவாய்க் கயமையை வென்றது அன்பின் நட்பு!
தாக்கவோர் ஆயுதமின்றித் திகைத்த வினை
தயங்கியே ஏற்றது தான் தோற்றதை!

Friday, December 31, 2010

புத்தாண்டு புது ஆண்டோ ?

புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிடும் நேரமிது - இரண்டாயிரத்து
பத்தாண்டு முடிந்திங்கு பதினொன்று தொடங்கும் வேளையிலே!
எவ்வாண்டின் துவக்கத்திலும் தோன்றும் ஆசைதான் இப்போதும் -
அவ்வாண்டை விடவோர் நல்லாண்டாய் இவ்வாண்டு வேண்டுமென்று!
ஆண்டாண்டாய் ஆண்டனுபவித்தும் ஏன் நமக்கு விளங்கவில்லை -
எண்ணால் வேறுபடும் ஆண்டனைத்தும் வினையால் ஓராண்டே என்று?