எளிதிலும் எளிது - யாரையும் மன்னிக்கும் மனது இல்லாமலிருப்பது;
எளிது - தனக்குப் பிடித்தவர்களை மட்டுமே மன்னிக்க நினைப்பது;
எளிதிலும் அரிது - தெரியாமல் மோதிச்சென்ற தெரியாதவரை மன்னிப்பது;
அரிதிலும் எளிது - தவறிழைத்த நண்பர்களையு ம் மன்னிக்காமல் தண்டிப்பது;
அரிது - கொடிய பகைவனையும் பெருந்துரோகியையும் மன்னித்து அருள்வது;
அரிதிலும் அரிது - தன்தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிக்க வேண்டுவது!