முன்னைப்போல் இசைத்திடென்று மன்றாடிக் கேட்டிடுவார்;
முன்னைப்போல் இசைத்தாலோ முந்தையது தானேவென்பார்!
உன்னைப்போல் இசைதந்தால் வேறுவிதம் வேண்டிடுவார்;
உன்னைப்போல் இசைக்காவிடில் எவ்விதம் ஏற்கவென்பார்!
விண்ணைப்போல் விரிந்து வளியைப்போல் நிறைந்து
மண்ணைப்போல் தாங்கி மகாநதியைப்போல் பரந்து
பண்ணால்தம் மனத்துயர் தீய்த்திடும் உன்பேரறிவை
எண்ணும் வழியற்றோர் உரைப்பதெலாம் உளறலே!
6 comments:
மிக்க நன்று!
very nice...
Aaha ! Arputhamana VaarthaigaL !!
very nice doctor
Nice One Doctor
Thank you very much for your comments, friends :-)
Post a Comment