Saturday, January 09, 2016

போதைக்கு அடிமை நான்!

பன்னாட்டு மாநாடு எந்நாட்டில் நிகழ்ந்திடினும் 
தோழமையென வழங்கும் மதிநிறை மாலையிலே 
இம்மதுவோ அம்மதுவோ எம்மது தந்திடவென 
வினவிடும் அன்பரிடம் - மதுவேதும் பழகாதவன் 
நானென்றுரைக்க அவர் புருவங்கள் மேலெழும்பும் 
செயலெனக்குத்தரும் போதைக்கு அடிமை நான்!

No comments: