Thursday, August 16, 2007

இந்தியன் உலகிற்கு உரைப்பது

எந்தப் புரட்சியும் வன்முறையே என்பதில் நம்பிக்கையில்லை எங்களுக்கு - அதனால் தான்
அறவழியில் போர்நடத்தியும் விடுதலைபெற இயலுமென்று உங்களுக்குக் கற்றுத்தந்தோம்!
எந்தக் காயமும் ஆறிவிடும் என்பதில் மிக்க நம்பிக்கை எங்களுக்கு - அதனால் தான்
பிரிவினைகளால் பட்டவலிகளை மறந்து ஒருகுடும்பமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

எந்த நிலையிலும் இன்னொருவர் பொருளுக்கு ஆசைப்பட்டதில்லை நாங்கள் - அதனால் தான்

எங்கள் முப்படைகள் எங்கள் தற்காப்பிற்கும் உங்கள் உதவிக்கும் மட்டுமே செயல்படுகின்றன!
எந்த வகையிலும் சார்புநிலை கொள்ளாதது எங்கள் அரசியல் சட்டம் - அதனால் தான்
எங்கள் வேறுபாடுகளைக் கடந்து களைந்து இந்தியர்களாய் ஒன்றுபட்டிருக்கிறோம்!

எந்தக் குடும்பத்தைப் போலவும் எங்களுக்குள்ளும் சில சிக்கல்கள் இருக்கலாம் - ஆனாலும்
அவற்றை மற்றவர்கள் தலையீடில்லாமல் நாங்களே அமைதியாய்த் தீர்த்துக்கொள்வோம்!
எங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி முன்பு வென்றிருக்கலாம்! இனி செல்லாது - காரணம்:
சேர்ந்து வாழ்வதன் நன்மைகளை நாங்கள் உணர்ந்து விட்டோம்!

விடுதலை பெற்ற அறுபது ஆண்டுகளில் உங்களுக்கு நிறையக் கொடுத்திருக்கிறோம் - இனி
நாங்கள் உங்களுக்குத் தரவேண்டியது எங்கள் தலைமையின் பலனைத் தான்! ஆம்!
வல்லரசாய் நல்லரசாய் நாங்கள் வளர வழிவிடுங்கள் - அடுத்த தலைமுறையில்
உங்களை நாங்கள் வழிநடத்த!

இனிய 60வது விடுதலை நாள் வாழ்த்துக்கள்!

7 comments:

Anonymous said...

Great!! Enjoyed reading the poem...sir.

Narasimman said...

Very Nice.We will talk about this when we meet.

B.Narasimman

Vignesh Subramanian said...

Vijay... Unga Kavithai:

Edhir kaala kannadiyil,
indraiya unmai-yin
prathi-bhimbam..

Translation:
Reflection of Reality
In a mirror
That is tomorrow.. !!

Vijay Venkatraman Janarthanan said...

Dear Vicky,

I am honoured by your comments! What to say? I don't think you could have understood me better! Thanks for everything!

With love,
Vijay.

Ramji said...

Dear Vijay

The poems (Both Tamil and English) are very good. I like the positive tone of the poem. Good.

Keep writing more.

Regards,
Ram

Anonymous said...

Very nice one

thodarndhu ezudhungal

anbudan
Geetha

Priya Krish said...

"A very Impressive Work... And the Positive Outlook makes it just Excellent... I really Enjoyed reading it"