Showing posts with label பிறந்தநாள். Show all posts
Showing posts with label பிறந்தநாள். Show all posts

Sunday, August 04, 2024

நண்பன் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

மருத்துவம் நம்மைச் சந்திக்க வைத்தாலும் 
இசையே நம்மை இணைத்து வைத்தது! 
உன்னைப்போலத் தான் நானென்று நீயும் 
என்னைப்போலத் தான் நீயென்று நானும் 
உணர்ந்த அத்தருணத்தில் தொடங்கிய நட்பால் 
எவ்வளவு இசையை பருகியிருப்போம் ஒன்றாக!
எத்தனை மேடைகளில் இசைத்திருப்போம் நன்றாக!
இசைஞானியின் பெருமையினை இணைந்து நாம்உணர 
இசைந்த நம்மனங்கள் வளர்த்த அன்பினால் 
உன்வாழ்வில் நானும் என்வாழ்வில் நீயும் 
இரண்டரக் கலந்திடவே ஒன்றானது நம்வாழ்வு! 
உன்னைநான் வாழ்த்துவதும் என்னைநீ வாழ்த்துவதும் 
வார்த்தைகளாலா? அல்ல! ஒன்றான மனத்தால்!

"ஹே ராஜா! ஒன்றானோம் இன்று! 
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று!"

என்று நமக்குப் பொருத்தமாகப் 
பாடல்தந்து 
நட்பே வாழ்த்திய பெருமையுடன் சொல்வேன்:

Happy Birthday, Partner! Wishing you many more happy returns of the day!

Tuesday, January 31, 2023

என்னுடன் வாழ்கநீ நூறாண்டு!

என்னைத் தன்னுடன் இணைத்தும் 
என்னை நானென்ற இயல்புடனே 
என்னை என்னிற் சிறந்தவனாக்க 
என்னை என்றும் முயலவைக்கும் 

என்னவளே உனைப்போல் யாருண்டு? 
என்னுடன் வாழ்கநீ நூறாண்டு!

(31 ஜனவரி 2023 அன்று என் மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்தாக எழுதியது)

Sunday, June 03, 2012

பிறந்தநாள் நன்றிக் கவிதை!

கொள்ளும் தனிமையில் கடவுளைக் காண்பவர்!
தன்ரசிகரைத் தனிமை கொல்லாமல் காப்பவர் - 
அவர்தம் பிறந்தநாளன்று வாழ்த்துமின்றி வணக்கமுமின்றி 
எண்ணத்தால் நிறைகிறேன் - நன்றியை நவில!

A simple man who enjoys isolation but (through his great compositions) has saved millions of his fans of three generations from being isolated, was born on this day, sixty nine years ago! Celebrating his birthday in every possible way is a custom for some, means business for many but for us his fans, it is a calm genuine gesture of our heartfelt gratitude for him. May Ilaiyaraaja live amidst us to treat many more generations with his everflowing river of music!